பக்கம்:முருகன் காட்சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82° முருகன் காட்சி

திருமுருகாற்றுப்படையை நியமமாக ஓதி வரும் பெரியோர்கள் கீழ்க்காணும் இக்கட்டளைக் கலித்துறை யினையும் ஒதிவருகின்றனர் :

ஒருமுரு காவென்றன் உள்ளங் குளிர உவந்துடனே வருமுரு காவென்று வாய்வெரு வாகிற்பக் கையிங் ங்னே தருமுரு காவென்று தான்புலம் பாகிற்பத் தையன் முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே.

வெளுத்ததெல்லாம் பாலல்ல; ஆனால் நம்பிக்கையின் அடித்தளத்தில்தான் வாழ்க்கையின் உயிர் நாடி உள்ளது.” திருமுருகாற்றுப்படையினை நாள்தோறும் நல்ல நெஞ் சுடனே ஒதிவருவார்க்கு எண்ணிய பொருள் எளிதில் கைகூடும் என்பர் பெரியோர். அம்முறையில் நாமும் நக்கீரர் உரைத்த நல் முருகாற்றுப்படையை நாள்தோறும் ஒதி, செவ்வேளின் அருள் பெற்று நற்பயனை எய்துவோமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/84&oldid=585972" இலிருந்து மீள்விக்கப்பட்டது