பக்கம்:முருகன் காட்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின்

பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்பு அன்: வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் பின்னணியில் முத்கள் வாழ்க்கையினைக் கிளத்திக் கூறுவனவே சங்க இலக்கியங் களாகும். தொல்காப்பியனார் கூறும் முதற்_பொருளும் கருப்பொருளும் இயற்கையின் இனிய பெற்றியினை எடுத் தியம்ப, அவ்ர் கூறும் உரிப்பொருள் மக்கள் வாழ்வினை வகையுறப் புனைந்து நிற்கின்றது. எனவே இயற்கையில் இலங்கும் அழகினைப் போற்றி மகிழ்ந்தனர். பழந்தமிழர் எனலாம். இயற்கையை இனிது போற்றியதோடு, இயற். கையில் இறைவன் கொலுவீற்றிருப்பதாக எண்ணி, அவ் எண்ணத்தின் அடிப்பட்ையில் இறைவனை வழிபடவும் செய்தனர் நம்மவர்கள். அவ் இறைவனை முருகன் என்றனர். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக் குமரன் கொலு வீற்றிருப்பதாகக் கொண்டு, ஆங்காங்கு அவனை விழாவெடுத்து வழிபட்டனர்.

அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகவும் கொண்டனர் நந்தமிழர். முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்’ என்பர் அருண கிரியார்.

பரங்குன்றில் அமர்ந்த பன்னிருகைக் கோமானைப் பற்றி எழுந்த முருகன் காட்சி எனும் இந்நூலில் பன்னிரு கட்டுரைகள் அடங்கியுள்ளன. முதற் கட்டுரை முருகும் உலகும் என்பது எங்கும் காணப்படும் இயற்கையில் முருகன் நீக்கமற நிறைந்தொளிர்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டுவதாகும்.

இரண்டாவது கட்டுரை நக்கீரர் வரலாறு’ என்ப தாகும். இக்கட்டுரையில் திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் நக்கீரர் குறித்த பழைய செய்திகள் பரக்கப் பேசப் படுகின்றன. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/9&oldid=585978" இலிருந்து மீள்விக்கப்பட்டது