பக்கம்:முருகன் காட்சி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BB முருகன் காட்சி

ஒன்பதாவது பரிபாடலின் ஆசிரியராகிய குன்றம் பூதனார் முருகன் திருவவதாரத்தினை முதற்கண் கிளத்திக் கூறி, காதற் காமம் காமத்திற் சிறந்தது எனக் களவின் வழி வள்ளி முருகனைக் கூடின சிறப்புக்கூறி, புலத்தலிம் சிறந்தது கற்பு எனக்கூறி, வள்ளிக்கும் தெய்வ யானைக்கும் இடையே நிகழ்ந்த ஊடலைக் கூறி, இறுதியில் குமரப் பெருமானின் வாழ்த்தோடு பாடலை முடிக்கின்றார்.

பரிபாடலின் பதினான்காம் பாடலில் கேசவனார் என்னும் புலவர் பருவங் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப முருகவேளைப் பரவுவாளாய், அப்பருவத்தே தலைமகன் வரும் என்பதுபடத் தோழி வற்புறுத்திப் பாடிய பாட லாகும். இப்பாடலில், ஆறு திருமுகத்தையும் பன்னிரு தோளையும் கொண்டு வள்ளியென்னும் மலர் போன்ற மகளை விரும்பியவன் என்று முருகனின் தண்டாத சிறப்புப் புலவரால் பேசப்படுகின்றது:

அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூ நயங் தோயே.

-பரிபாடல் : 14 : 21-22

நல்லழுசியார் என்னும் நல்லிசைப் புலவர் இயற்றிய பரிபாடலின் பதினேழாம் பாடலில் கடப்பமரத்தடியில் எழுந்தருளுயிருக்கும் கந்தவேளைக் கனிந்து இசையுடன் பரவிப் பாடி, தேவருலகும் வேண்டாத திருப்தியுடன் அடியவர்,

மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடிப்

பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ

பணியொரீஇ நின்புகழ் ஏத்தி a

அணிநெடுங் குன்றம் பாடுதுங் தொழுதும்

அவை, யாமும்எம் சுற்றமும் பரவுதும்

ஏம வைகல் பெறுகயாம் எனவே

- -பரிபாடல் : 17 : 48-53

என்று நிற்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/90&oldid=585979" இலிருந்து மீள்விக்கப்பட்டது