பக்கம்:முருகன் காட்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகன் காட்சி

கின்றோம்; அதற்கு அருள் புரிவாயாக’ என்று வேண்டிப் பாடலை முடிக்கின்றார். -

மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோள வை யறுமுகம் விரித்தவை நன்றமர் ஆயமோடு ஒருங்குகின் னடியுறை இன்று போல் இயைகெனப் பரவுவதும் ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே.

- -பரிபாடல் : 21 : 66-70

இவ்வாறாகப் பரிபாடலில் செவ்வேளைப் பற்றி வந்துள்ள எட்டுப் பாடல்களையும் பாடியுள்ள புலவரி எழுவரும் திருமுருகனின் கோலக் காட்சியினைத் திறம் படப் புனைந்துள்ளனர். அவர்கள் கண்ட காட்சியின் மாட்சி, காய்கதிர்க் காட்சியெனச் சுடர்விட்டு ஒவி வீசி நிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/92&oldid=585981" இலிருந்து மீள்விக்கப்பட்டது