பக்கம்:முருகன் முறையீடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

(வேறு)

 

திருமுருகா உமைபாலா திருச்செந்தூர்
வடிவேலா தேவா தெய்வப்
பெருங்கருணைத் தலைவா நற் பேரின்ப
மறையாளா பெருமா னீன்ற
இருமகளிர் தனைமருவும் எழிலாளா
இன்றுனையோர் எளியேன் கூவி
வருகவென அழைத்தக்கால் வாராயோ
வந்தெனக்கு வரந்தா ராயோ.

வம்பிடுஞ்சே யானாலும் வளர்க்குந்தாய்
மனம்வாடி விருந்தி நின்று.
வெம்பியழ விடுவாளோ விரும்பியுண
வளிக்கமன மிசைவா ளன்றோ
நம்பியுனை நாடிமனம் நலிந்துவினைக்
குறைதன்னை நவின்று நின்றேன்
எம்பெருமான் கருணை தனை யேழையேற்
கருள்செய்யா திருப்ப தென்னே

அழுதுமன மழுங்கிநின தருள்பெறவென்
னிருகைசேர்த் தண்ணா வென்றேன்
தொழுதேதின் பதங்காணா துக்கித்தேன்
சோம்பிமனஞ் சுழன்று நின்றேன்
பழுதுகளே செய்தவனென் றுலகத்தார்
வசைகூறிப் பழிக்கா வண்ணம்
எழுதருபொன் மேனியினாய் எனையருளும்
அடியனொரு ஏழையேனே

சேமமுறு வழிகாண்ணார் செய்தொழிலின்
திறனறியார் செனித்து மண்மேல்
காமிகளாய் அலைவரொரு காசுக்கும்
பயனில்லாக் கயவராகிப்
பாமரராய் வாடிமனம் பதைத்துருகி
உணவின்றிப் பதறி வீழ்வர்
ஏமமுறும் நன்னெறியொன் றிலையோசொல்
எழிற்றணிகை இறைவ னாரே.

தில்லையில்வா ழண்ணலருள் திருமகனே
உம்பாருந் தேவே நாயேன்
தொல்லைவினை தனிலுழலா தறநீங்கித்
தொண்ட னெனுந் தூயோ னாகி