பக்கம்:முருகன் முறையீடு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சத்ததமும் நின் பதம் சதமென்று நம்பினேன்
சண்முகா வேழை நாயேன்
சிந்தைமிக வாடினேன் செய்த குறை செப்பினேன்
தீர்த்துவீ ணவல மெல்லாம்
நிந்தையற வாய்மையும் நிலைபெற்ற வாழ்வுமிந்
தேயனுக் குதவி யருள் வாய்
கந்தனெனு மீராறு கண்ணுடைய அண்ணலே!
கெளரியா னீன்ற தேவே.

 

'முருகன் திருவடிகளே சரணம்’


 

'குருபரானந்த குகனே'

 

கண்டதும் கைகூப்பித் தொழுவதும் பின்புலகின்
கவலையினுள் மூழ்குவதுமே
கால மிதில் யான்செயும் கடமையெனக்கொ ண்டுனைக்
கண்டறியும் மார்க்கம் தெளியேன்

பண்டுமறை நூல்களைப் பாடிப்படித்துமணம் பக்குவம்
அடையும் என்றே
பார்த்துப் பல்லாண்டுகள் வீணே கழிந்தன
பலனொன்றும் யானடைகிலேன்

சண்டமாருதம் என்ன சுழலுதே நெஞ்சம் அது
சற்றேனும் நிற்க வேண்டின்
சத்தியம் சொல்லுவேன் சண்முகா அது உனருள்
தரம் ஒன்றில் முடியுமன்றோ

கொண்டல் வானத்தில்வர குயில்பாட மயிலாடக்
கொவ்வைச் செவ்வாய் திறக்கும்
கோலாகலக் குமர வேலனே எனையாளும்
குருபரானந்த குகனே.


'முருகன் பதிகம்' என்ற நூலில் எடுத்தது. மாணவப் பருவத்தில் திருக்குறளார் பாடியது.