பக்கம்:முருகன் முறையீடு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 உண்ணயந்தே முருகனடிக்கன் புடையோன்
முனிசாமி உவந்து நாளும்
பண்ணியலும் அவனடிக்கே முறையீடொன்
றிட்டுநலம் பெற்றான் மாதோ.


நேரிசை வெண்பா

முருகன் முறையீட்டை முற்றுணர நாளும்
பெருகும் அவனருளே பின்னை - மருவிடவே
நல்லறிவுற் றோங்கிநலம் நாயகமாய் நானிலத்தில்
வல்லவராய் வாழ்வர் வகை,


சென்னை திருப்புகழமிர்தம்" ஆசிரியர் காங்கேயநல்லூர் திருப்புகழ் பக்த பாததூனி குகஸ்ரீ கிருபானந்தவாரி அவர்கள் பாடியவை.

அறுசீர் விருத்தம்

இருமைநல மினிதுபெற விழைந்துமுனி
சாமியெனு மிளைய செம்மல்
தருமருவு மரிமகனைத் தளை நீக்கி
யரிமகனைத் தளைசெய் தாண்டே
ஒரு மொழியைக் கற்றவர்கள் புகழ்ந்தேத்தக்
கற்றவர்கொ ளொருவற் கீந்த
திருமுருகன் முறையீட்டைச் செழுந்தேன்போற்
செந்தமிழாற் செப்பி னானால்

நேரிசை வெண்பா.

மறையா யிரமேத்தும் வள்ளல் முருகள்
முறையீட்டை யன்பாய் மொழிந்தான் பொறையார்
புகழ்வீரா சாமிப் புதல் வனருட் போத
திகழுமுனி சாமிநலஞ் சேர்ந்து,