பக்கம்:முருகன் முறையீடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 3 திரிசிரபுரம் அர்ச் சூசையப்பர் காலசாலைத் தமிழாசிரியர் உயர் திருவாளர் வித்துவான் திரு. ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் பாடியவை.

              அறுசீர் விருத்தம்

சீர்சான்ற வேதசிவா கமங்களினுண் மைப்பொருள்சேர் செவ்வி வாய்ப்ப . ' ' ' . . * ! ஏர்சான்ற மனக்குறைகளிவையெனமேற் கோள்நிறுவி யெவரு மெச்ச

- - நேர்சான்ற வேல்முருகன் முறையீடாச் செப்புமிந்நூ

னெறியிற் றந்தான் பேர்சான்ற திரிசிரமா புரம்வாழும் முனிசாமிப் பெரியோன் மாதோ இப்பெரிய நூலதனை வாசிப்போர் தமிழ்மொழியி னேற்றத்தோடே ஒப்பரிய மயில் வீரன் அருள்பெற்று நலந்திகழு முயர்வு கொண்டு செப்பரிய நான்மறையி லாகமத்திற் சாத்திரத்திற் சிறக்கக் கூறும் மெய்ப்பொருளி னுண்மையுணர்ந் துயர்ஞானச் செல்வர்களாய் விளங்கு வாரே.

                  ......
  இந்நூலாசிரியரது சகோதரரும் திரிசிரபுரம் ரயில்வே போலீஸ் ஆபீசில் வேலை பார்த்துவருபவருமான உயர்திருவாளர் வி. தியாகராஜப் பிள்ளை அவர்கள் பாடியது.
                  அறுசீர் விருத்தம்

பொங்கிவளர் அன்புடையோன் பொறையுடையோன் பூதலத்தில் புகழே கொண்டோன் எங்களுயர் தந்தை யெனும் எழில்வீரா சாமிமனம் இசைந்தே நாளும்