பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1044

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கதிர்காமம் திருப்புகழ் உரை 571 420 உடுப்பதற்கு ஆடைவேண்டும், பெரும் l பசியைத் தணிப்பதற்கு நிரம்பப் பருகும் உணவு வேண்டும், தேகம் நல்ல ஒளி தருவதற்கு குளிக்க) நீரும் (உயர்ந்த) ஆடையும் வேண்டும், உடலுறு நோய்களை ஒழிப்பதற்கு பரிகாரம் (வைத்தியம்) வேண்டும், வீட்டில் இருப்ப்தற்கு இளம் பெண் ( மனைவி) வேண்டும், படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும், இவ்வாறாகச் செளகரியங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்று, குடும்பத்தனாகி, அந்த இல்லறம் என்னும் மயக்கக் கடலில் திளைத்து ஊடாடி பெருத்த (தனது) சுற்றத்தார்களைப் பரிபாலிப்பவனாயிருந்து (ஈற்றில்) உயிர் வீணாக்க் கழிந்துபோம். (ஆதலால் இறைவா நீ எனக்கு) கிருபைச் சித்தத்தையும் (கருணை உள்ளத்தையும்), ஞான போதமும் (ஞானநிலை அறிவையும்), (என்னை) அழைத்துத் தரவேணும்; ஊழ்வினைப்படி பிறப்பு என்கின்ற மலைச் சூழலில் சுழலுகின்ற என்னை (அங்ங்னம்) ஆண்டருளும் நாளும் ஒன்று உண்டோ! ஆண்டருளும் நாள் கிடைக்குமா! மேற்கே சில துாதர்கள் தேடவேண்டும், வடக்கே சில து.ாதர்கள் தேடவேண்டும், கிழக்கே சில துரதர்கள் தேட வேண்டும் என்று மேவுவித்து (அனுப்பி வைத்து) குறிப்பினாலேயே குறித்த பொருளைக் காணவல்ல மாருதி (அநுமார்) இனி, தென்திசைக்கு ஒரு துரதனாகப் போக விேன்டியது:சொல்லியனுப்பும் குறிப்பு விவரத்தின்படி குறித்த பொருள் கிட்டுதல் தவறிப் போனபோதிலும் திரும்பி விணே வரலாமோ (வருதல் நன்றல்ல) (என்று சுக்கிரீவன் சொல்லி *1942 I (முன் பக்கத் தொடர்ச்சி) கேட்டு இராவணன் சீதையைக் கொண்டுபோன விவரத்தைக் கூற, அதுமார் சீதையின் இருப்பிடத்தை அறிந்து கடலைத் தாண்டி இலங்கையிற் சீதையைக் கண்டனர் என்பது வரலாறு.