பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1073

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை உளது என்பதைச் சிலப் பதிகாரம் (காடுகாண்காதை) விளக்குகின்றது. திருப்புகழ் பாடல்கள் 572, 938. பாட பேதத்தின் படி இத்தலத்துக்கு உரிய பாடல்களாகும். "மதில் சூழ் சோலைமலக் கரசே"பெரியாழ்வார் திருமொழி-70) 433. வாழ தனதன தான தனதன தான தனதன தான தனதான அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி. அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்; இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே. இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்; * மகபதி யாகி மருவும் t வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே. 曹 மகபதி - நூறு அசுவமேதயாகம் முடித்தவர் இந்திரபதவி அடைவர். பாட்டு 232 பார்க்க t வலாரி - இந்திரன். பாடல் 351 பார்க்க