பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை Ꮾ29 வாய் விரிவாகப் பேசும் பொய்யர்கள், நண்பு செய்து யாரையும் வஞ்சித்து வடிகட்டுபவர் விலக்குபவர் . இப்படிப் பட்ட பொதுமகளிரின் மாயைச் செயலுக்கே மனம் வைத்து, அதனுள் (அந்த மாயையுள்) தினந்தோறும் அலைவேனோ! அழகிய காட்டிடையே இருந்த னைப் புனத்தை அடைந்து, (அப் புனத்துக்குக்) காவலிருந்து கவண் கல் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப்பெண் வள்ளி மகிழ்ச்சி கொள்ளும் மணவாளனே! தலங்கள்தோறும் தேடிச்சென்று (பாடல்) பாடிய சொல் நிறைந்த புலவனாம் சுந்தரமூர்த்திக்கு இன்பம் தரவேண்டி (பரவையிட்ம்) தூது சென்ற அத்தர் (சிவபிரானிடத்தில்) வந்த கற்பகமே தேவர்களுக்கு முதல்வனே! சீகாழிப் பதியில் (சம்பந்தராய்) அவதரித்தவனே! விரும்பி வாழ்த்துவோருடைய மனத்தில் புகும் உத்தமன்ே! மதுரையில் வைகையில் (வெள்ளம் வந்தபோது) அணைகட்ட ஆளாக ஒப்புக்கொண்டு உதிர்ந்த பிட்டமுது வேண்டி, (பிட்ட் முது வேண் ஆளாகி) அடிபட்ட சொக்க நாதரோடு - (சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரைக்கு அருகே). சந்தனமரமும் அகில் மரமும் உள்ள மரக்கூட்டங்கள் மேகத்தோடு சம்பந்தப்பட்டு நெருங்கிய, பழைய சோலைமலை ஊரில் விளங்கும் பெருமாளே! (மாயைக்கே மனம் வைத்து, அதனுள் தினம் அலைவேனோ) 444 தருக்கம் - சண்டையிடும் உணர்ச்சி பொதிந்து நெருங்கும் வேல் போன்ற கண்களை உடைய (பொது) மகளிரின் மாயம் எனைப் பீடியாது ஒழிந்து நான் தெளிவான அறிவைப் பெறுகின்றேன் இல்லை - (பெறஇல்லையே!) சென் று பரவையாரைச் சுந்தரருடன் கூட்டிவைத்தனர். (பாடல் - 140 பார்க்க.)

  1. திருப்புகலிப்பதி - சீகாழி.

S வைகையில் கட்டி - இவ்வரலாற்றை 439ஆம் பாட்டின் கீழ்க் குறிப்பிற் காண்க