பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதிருப்பதி திருப்புகழ் உரை 645 ஆறு திருப்பதி 449 அலை வீசும் கடலுக்கு ஒப்பான கண்கொண்டு (காம) வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகாபாவிகள் - தமது உபாயத்தாலே அதிக (பல) விதமான செருக்குடன் தாழ்வான அநீதΙΟΠΤΦΕΤ (அநியாயமான) பேச்ச பல பேசுபவர்கள், அசட்டு மனிதரொடு உறவு செய்பவர்கள், அநியாய வழியில். கலை (உடலை) பகர் (விற்கின்ற) விலை மாதர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், (அல்லது பாலவயதினர் குடிகேடிகள்), (நான்) மனத்தில் விரும்பிய கொடிபோன்ற மகளிர்-ஆகிய பொது மாதர்களுடன் இன்பகர. மாகக் (கூடி) (அவர்களுடைய) பாரமான செல்வமாம் கொங்கைமேலே விழுகின்ற வஞ்சகன், முழுமூடன் உன் திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்புரிவாயாக. அலை வீசும் (கங்கை) நீரைத் தலையிற் சூடிய பசுபதி சிவபிரானது - மகனாகிய ஆறுமுக உருவத்தனே! அருள் பாலிக்கும் குருமூர்த்தியே! அசுரர்களின் குடி அழியும்படியும், தேவர்கள் தமது ஊரை (அமராவதியைப்) பெறும்படியும், ஒலிபெருக்கிச் செல்லும் கூரிய வேலைச் செலுத்தின அதிசூரனே! (முன் பக்கத் தொடர்ச்சி) "எண்ணெண் கலையோர் இருபெருவீதி" "எண்ணான் கிரட்டி விருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர் (சிலப் 14,167.22:138) S பகர்தல் விற்றல் சொல்லுதல்