பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதிருப்பதி திருப்புகழ் உரை 649 அன்பர்கள் செய்யும் தானத்திலும் தவத்திலும் மேன்மைப் பகுதியைப் பெறுபவனே! (தானமும் தவமும் மிகுதியாக உனைக் குறித்தே அன்பர்கள் செய்வார்கள் என்றபடி) சரசுவதி தேவியாம் உத்தமியின் துணைவனே! (கலை மகளுக்குத் துணைசெய்பவனே - உதவி புரிபவனே - அல்லது) சகோதர முறை உடையவனே! சிவபிராற்கு ஆன (உகந்த) திருப்பதிகங்களை (தேவாரப் பாக்களை) அருளிய இளையோனே (சம்பந்த மூர்த்தியே): ஆறு திருப்பதிகளில் (ஆறுபடை வீடுகளில்) விளங்கும் பெருமாளே! (நாணமகற்றிய கருணைபுரிவாயே)