பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 129 போரில் முதன்மையாளரும், விரும்பிய, மிக்க வலிமையையும் அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தையும் கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன் (யானை) தெளிந்த அறிவுடன் "மூலமே" என்றழைக்க, முன்னதாக (உதவ வேண்டும் என்னும்) சிந்தனையுடன் வந்தருளிய வருமான திருமாலின் - - திருமருகனே! சூரனது மார்புடன் (ஏழு) மலைகளும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச் Χ: ஜெய சரவணனே!- மனோகரனே! (மனதுக்கு) இன்ப்ம் தருபவனே! செந்துார்க் கந்தப் பெருமாளே! (பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே) 49. அறிவு அழியவும், மயக்கம் பெருகவும், பேச்சு அடங்கவும், கண்கள் சுழலவும், (உடற்) சூடு தணியவும், மல்ம் ஒழுகவும், நீங்காமலே - தாயும், மனைவியும் பக்கத்திலேயே இருந்து அச்சமுற்று அழ, உறவினரும் அழி, நெருப்புக்கு ஒப்பான யமன் என்னை அழையாதபடி, நெருங்கியுள்ள இருவினைகளும், மனமும், பொருந்திய ஐம்புலன்களும் ஒழிந்து நீங்க, உயர்ந்த (உனது) திருவடியில் அணுக (எனக்கு) வரம் தந்தருளுவாயாக; சிவனுக்கு ஒப்பான பொதியமலை முநிவனாம் ಕ್ಲೆಕ್ಚಿಲ್ಡಿ உள்ளம் மகிழ, இரு செவிகளும் குளிர, இனிய தமிழை ஒதினவனே! தாம்தாம் போகும் ஒழுக்கமான வழி தவறிச் சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன் கருநிறமுள்ள துளவமாலை அணிந்த திருமால் - பொருந்திய பிரமன் ஆகிய இவர்கள் யாவரும் அலையும்படி அரசாட்சி செய்த அவுணனது (சூரனது) மார்பு பிளவு படும்படி வேலைச் செலுத்தினவனே !