பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 131 மான், மழு (இவை) திருக்கையில் விளங்கும் பரமன், உமை இவர்தம் இருவிழிகளும் மகிழ்ச்சிகொள்ள அவர்தம் மடியில் வளரும் இளையோனே! மரக்கலங்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து கள் மணல் மேட்டில் மறையும்படி உயர்ந்த திருச்செந்துார்க் (கடற்) கரையில் வீற்றிருக்கும் பெருமாளே. (திருவடியில் அணுக வரம் அருள்வாயே.) 50 (உற்ற பெரு நோயைக் கண்டு) யாவரும் அச்சங் கொண்டும் மனக்குழப்பங்கொண்டும், (எம்மிடம் அணுகாதே) விரைவில் (அகலுக) எனக் கோபித்துக் கூறி (வெருட்டவும்) (விடாது) நெருங்கி அவர்கள் அடிப் பின்னேயே தொடர்ந்து, பிணம்போல் நாறுகின்றதும் அழுகிப்போம் நிலையைத் தருவதுமான நோய்கொண்டு, வெளிவரும் புழுவுடன் எலும்புகள் நிலைகுலையும் துன்ப உடலைச் சுமந்து தடுமாற்றம் அடைந்து வீடுகள்தோறும் (போய்) இதமான மொழிகளைச் சொல்லி, நாள் செல்லச் செல்ல புதிய இடங்களில்) உண்டு மனம் போன வழியில் திரிந்து அழிகின்ற பழிப்பு நீங்க - மறை நான்கின் வகைகளை அறிந்து முறைப்புடி சிறிய சதங்கைகள் கொஞ்சுகின்ற மலர் போன்ற திருவடியை வணங்கும் (பாக்கியத்தை) என்று பெறுவேனோ! தினைமீதிருந்த கிளிகளை ஒட்டிய புனத்திலிருந்த மயிலுடைய (வள்ளியம்மையுடைய) இளங்குரும்பை (தென்னங் குரும்பை) போல விளங்கும் இரண்டு கொங்கைகளை அணைந்த அழகிய மார்பனே! உலகம் மயையும் $o. யானைமுகவனோடு (கணபதி யோடு போட்டியிட்டுத் தந்தை (சிவபிரானது) முன்னிலையில் வட்டமாகச் (சக்ரவாளகிரியை) வலம்வந்த செம்பென் மயில்விபனே!