பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 155 ஆகாய முகட்டில் விளங்கும் அளவுக்கு அடங்காத கங்கையாம் புனிதநீர் (சடா மகுடத்தில்) அசைந்தாடும்(கம்பர்க்கு), தாமரைப் பீடத்தில் அமர்ந்துள்ள பிரமனால் அளவிட யாத கம்பர்க்கு (சிவபிராற்கு), ஒன்றைப் (ஒப்பற்ற பிரணவப் பொருளைப்) போதித்தவனே! சிகரங்களையுடைய கோபுரத்தின் மீதும், மதில் மேலும், செம்பொற் கம்பங்களின் மேல் அமைந்துள்ள தளத்தின் மீதும் - தெருவிலும் முத்துக்களை எறிகின்ற அலைகளின் கரையில் (உள்ள) திருச்செந்துார்க் கந்தப் பெருமாளே! (அம்பொன் தண்டைக் கழல் தாராப்.) 64 குடல், கொழுப்பு, எலும்பு, ஜலம், மலம், நிரம்பியுள்ள ரத்தம், நரம்பு, சீ(ழ்) மாமிசம், மூடும் தோல் - (இவையுடன்) விளங்குகின்ற கூடாகிய (மரக்) கட்டையைச் சுமந்து, கொஞ்சிப் பேசியும் மகிழ்ந்தும் நாயேன் தளர்ந்து (ம்), நெருங்கிவரும் மன்மதனது அம்பு போன்ற கரிய கண்களையுடைய மாதர்தம் தோள்களில் தோய்ந்தும், சோர்ந்தும், அறிவுஅழிந்து போகின்ற (துர்க்) குணம் தொலைய உனது (திரு) அடியிணைகளைத் தந்துநீ (என்னை) ஆண்டருளுவாயாக. பெருமை பொருந்திய (திருச்) செந்தூர் இறைவனே ! அன்பு விளங்கிய குறமங்கை (வள்ளிக்கு) வாழ்வாகின்ற திருப்புயங்களை உடையவனே ! சரவண கந்த ! முருக ! கடம்ப ! ஒப்பற்ற மயில் மீதேறி உலகை வலம் வந்தவனே !