பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 159 66 (பூங்) கொம்பு போன்ற மாதரது காதளவும் நீண்டு அதை மோதும் இரண்டு கண்களிலும், மகிழ்ச்சி தரக் கூடியதும் (அல்லது மிக்க வாசனை கொண்டுள்ளதும்) குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம், அணிகலன்கள் கொண்டுள்ளதும் மலை போன்றதுமான (நகக் குறிக்கு உற்றதுமான) -- கொங்கையிலும், நீர்த் தடாகத்தின் மேலே வளர்ந்துள்ள செங்கழுநீர்ப் மாலையைச் சூடிய கூந்தலிலும், உடலின் அ லும், மருட்சி கொள்ளாமல், தேவர்களுடைய சுவாமியே (நமோ நம) உன்னை வணங்குகின்றேன் வணங்குகின்றேன், எம்பெருமானே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், ஒளி பொருந்திய (கைதோள்) வளையணிந்த வள்ளியின் மேல் மோகங்கொண்டவனே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் என்று நாள்தோறும் - உன் புகழையே பாடி நான் இனி அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும் என் வாழ்நாள் வீண்ாண நாளாகப் போகாதபடியும் அருள் புரிவர்யாக; பம்பரம் சுழல்வதுபோல ஆடின சங்கரி, வேதாளங்களுக்குத் தலைவி, தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களிற் சிலம்பு அணிந்தவள், திருக்கரத்திற் சூலத்தை ஏந்தினவள் - குற்றமிலாத கருநிறத்தவள், காடுகாள் (துர்க்கை), பயத்தைத் தருபவள். (பய்ஹரி பயத்தைப் போக்குபவள்) மகாகாளி, யோகினி, ன்பு மதுபானஞ் செய்திருந்த சூரனொடு எதிர்த்து (நீ) போர் செய்ய வேண்டியதைக் குறித்து எம் மகனே நீ வாழ்க வாழ்க என்று ஆசி கூறும் வகையில் வெற்றியைத் தரும் வேலாயுதத்தைத் தரப்பெற்ற என்றும் அழியாதுள்ள மூர்த்தியே! மனதுக்கு இன்பம் தருபவனே! வயலூர்ப் பெருமானே!