பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 179 நூல்கள் எண்ணில்லாதன கோடிக் கணக்காகத் தேடிப் (பொருள்) ஆசை மிக்கு, பூமியில் உள்ளவரை நூற்றுக் கணக்கான செஞ்சொற்களால் புகழ்ந்து, (அவர்களால் பயன்அடையாமல் முகம்) மாறி (சோர்வுற்று) அதனால் விளைந்த தீமைகளும் (கெடுதல்களும்) நோயும் கலந்த (இந்த) வாழ்வை (இனி நான்) அடையாமல், நீ (என் உள்ளத்திற்) கலந்து என்னுள்ளேயே வீற்றிருக்கும் படிச் செய்யவல்ல ஞான நூல்கள் முழுமையும் ஒதும்படியான வாழ்வைத் தந்தருளுவாயாக. காலன் வந்து பாலனாம் (மார்க்கண்டனுடைய) உயிரைக் காய்ந்து (கவர்வதற்காக) பாசக் கயிற்றை வீசின. சமயத்தில் வெளி வந்து அபயம் , (தந்தோம்) அபயந் (தந்தோம்) என்ற முதல்வர், (அல்லது) கயிற்றை வீசின. காலம் வந்தபோது அபயம், அபயம் என்று கூறி அழைக்கப்பட்ட முதல்வர் மன்மதன் தனது ஐந்து பாணங்களோடு வெந்து போம்படி கண்ட மெள்ன் மூர்த்தி, கறுத்த கழுத்தை உடையவர். ஆன. சிவபிராற்குவ்ேதப் ப்ொருளை உரைத்தவனே! ஆலகால விஷம் தோன்றிய கடலிலே பள்ளி கொண்டவராகி, கஜேந்தினுடைய பயத்தைத் தீர்த்த மூல மூர்த்தி, சக்கரம் ஏந்திய அழகிய திருக்கையை உடையவர், இடையர் குலத்து வந்தவர், ஆகிய மாயோனுக்கு மருகனே! வேதங்கள் திருவடிகளைத் தேடக் கோழிக் கொடியைத் திருக்கரத்திற் கொண்ட முதல்வரான பெருமானே! திருச்செந்துரில் வாழ்ந்தருளும் பெருமாளே! (ஞான நூல் அடங்க ஒத வாழ்வு தருவாயே) 77 செல்வத்துக்குக் குபேரன், பதவிக்கு இந்திரன், புகழொளிக்குக் கந்தன் - என்றெல்லாம் நான் கூறி (ஈதற்கு) வருந்துவோரிடம் (போய்) -