பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 185 (நான்) அஞ்சும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில் ஒப்பற்ற உனக்கே அடைகலமாய் (உன்னையே) புகல் அடைந்து, தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப் பெறவே விரும்பும் அன்பு கொண்டு உனது திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரில் நீஅண்ட முகடு வெடிபடவும் இடிபடவும், எட்டுத் திக்குப் பக்கங்களும் மடமட என்னும்படி நடனம் செய்கின்ற அந்த உக்ரமயில் மீது அன்புடன் வரவேணும் - (கரிய) மேகம் போல வளர்ந்துள்ள கூந்தலும், மெல்லிய இன்பகரமான, அமிருதம் போன்ற பேச்சும், நிலவு போல விளங்கும் சுத்தமான வெண்ணிறமுள்ள பற்களும், இரண்டு குழையளவும் (காதளவும்) ஒடுகின்றநறுமணம் உள்ள தாமரை போன்ற கண்களும் அழகு வீசும். (வள்ளிமலைக்) குன்றில் வாழ்பவர்ான (வேடர்களுடைய) மடமகளாம் - (வள்ளியின்) பருத்த கொங்கை கள்ாகிய மந்தர மலைமீது தூங்கும் அழகிய மணவாளனே! தெற்கு, வடக்கு மேற்கு, மேலான கிழக்கு (முதலிய) திசைகள் எல்லாவற்றிலும் போர் செய்து, நிலவை அணிந்த சடை முடியராம் சிவபிரானுடைய பல கோயில்களையும் தொழுது, உயர்ந்த மகாமேரு மலையின்மீது - ‘செண்டை எறிந்த ரச அதிபதியே! தொண்டர் முதலானோர் வழிவழி அடிமையா షో து முத்தி பெற (அருளிய) திருச்ச்ெந்துள்ர் ம்ர்நகரில் இன்து வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. (யமராஜன் வரும் அவதரமதில் மயிலினில் வரவேணும்.) Hor முருகர் (உக்கிர குமாரனாய் அரசாண்டபொழுது) பொன் பெறவேண்டி மேருமலையாம் பொன் மலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும். திருப்புகழ் 2ல் பார்க்க