பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 193 கோடுள்ள வண்டுகளின் வரிசை ஒலிக்கின்ற வாசனையுள்ள இருட் கூந்தலாலும் - மனக் கவலை கொண்டு அறிவு மயங்கும் என்னை இன் பத்துடனும் அன்புடனும் (ஆண்டு) அருளுவாயாக திருமாலின் திருமகனே! கடப்ப மாலை அணிந்த அழகிய மார்பனே! அலை குமுகுமு என்று கொதிப்புக் கொள்ளக் கடலைக் கண்டித்து எறிந்த வேலாயுதனே! முப்புரம் எரித்த பெருமானும் வணங்கும் சற்குருநாதனே! ஜெய ஜெய! ஹரஹர! திருச்செந்துார்க் கந்தப் பெருமாளே! (மருளனை இன்புற் றன்புற் றருள்வாயே!) 83 பாதச் சிலம்பு, பாடகம் இவையுடன் சீர்கொண்ட நடை, அன்னப் பறவைகளின் கூட்டம் (நடப்பது) போல, (விளங்கவும்), சேர்க்கை இன்பங் கொண்டு, நல்ல அமைப்புள்ள பட்டாடை நெய்யப்பட்டது (நேர்த்தியாக நெய்யப்பட்ட பட்டாடை) சூழ்ந்துள்ள அழகிய இடை வஞ்சிக் கொடிபோல (விளங்கவும்) - அழகிய பால் குடம் போன்ற இரண்டு மலை போன்ற (கொங்கைகள்) ஆடவும், நீண்ட (மணி) வடம் சேரவும், அலங்காரமான கூந்தல் பரந்த அம் மேகத்தை (நிகர்க்கவும்), அழகிய் வில் (புருவத்தையும்) பிறை (நெற்றியையும்) ஒப்பென்று சொல்ல இருப்பவரும்: (பின்னும்) அழக்ை இவ்வாறு கொண்டு; அழகிய குயில் போலவும் கரும்பு போலவும் மொழியையும் | மயில் போன்றஅழகையும் கொண்டவரும்; கண்டவர். களைக் கொண்டாடி (அவர்களை) மறித்து நிறுத்தி, வாருங்கள் ( எங்கள்) வீட்டுக்கே என்று சொல்லி இதமான பேச்சுக்களைப் பேசி, படுக்கையின்மீது, அன்புள்ளவர்போல் (நடித்து) -