பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்| திருப்புகழ் உரை 225 தாமரையில் (iற்றிருக்கும்) பிரமன் அஞ்சும்படி அவனுக்குத் துயர் உண்டாக்கி (அவனது) மனம் நோவ (அவனைச்) சிறையிலிட்ட வேல்வீரனே! கற்கண்டுக்கு ஒப்பான மொழியை உடைய தேவர் குலத்து அழகிய மயில் போன்ற தேவசேனையின் பார்வை பாய்கின்ற அழகிய திருமார்பனே! செஞ்சொற் புலவர்களுடைய சங்க காலத்துத் தமிழைப் பெற்ற திருச் செந்துார்ப்பதி யென்னும் நகரில் உறைபவனே! செம்பொன்னாய்ச், சிறந்து, வடக்கே இருந்த கிரெளஞ்ச மலையைக் கடலிடையே சிதறும்படி போர் செய்ய வல்ல பெருமாளே! (சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும்) 96. அடிக்கடி வந்து, முன்னே தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பம் விளங்க நின்று, பாச்சி பாச்சி என்று அழுகின்ற குழந்தையும் -