பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 281 சண்டை செய்து, கையில் உள்ள வேல் (பகைவர்தம்) கொழுப்பை உண்ண, ரத்த நீர் ஏழு கடலினும் அதிகமாகப் (புரண்டு ஒட), குதிரையாம் பருத்த மயிலை நடத்திச் செலுத்தின அற்புத குமரேசனே! பூமியில் மேன்மையும் தகுதியும் மிக்க செம்பொன்மலையாம் மேருவைத் தனித்து (நீ) வலம்வர, சிவன் அந்தப் பழத்தை யானைமுகன் (கணபதி) வசம் தந்த தன்மையாலே (அந்த) சிவனார் வெட்கங்கொள்ள, உள்ளத்தில் மிகக் கோபங்கொண்டு அந்தப் பழத்தைத் தரவில்லையென்று, அருள்பாலிக்கும் திருச்செந்தூரிலும் பழநிச் சிவகிரியிலும் (வந்து) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! 118 டம்பப் பேச்சுப் பேசும் (பொது மகளிர்) காட்டும் ஆடம்பரக் கண்களாலும், (அவரது) அமுதம் போன்ற மாழியா லும் - ஆழ்ந்த அழகிய இள நகையாலும், துடி போன்ற இடையாலும், வாசனை நிறைந்த கூந்தலாலும் - சூதாடு கருவிபோன்ற இள முலையாலும், அழகிய தோடணிந்த இரு செவிகளாலும் சோரா வகைக்கும், மயக்கம் தரும் மாதர் தம் உறவால் வரும் இடர் சூழா வகைக்கும் (அல்லது - சோர்ந்து, மயக்கம் தரும் மாதர் தம் உறவால் வரும் இடர் என்னைச் சூழா வகைக்கு) அருள்புரிவாயாக. மலர் நிறைந்த இணையடிகளைச் சிந்தியாமலும், (சிந்திக்கும் அந்தப் பணியை மேற்கொள்ளாமலும் எதிரே வர யோசியாமலே - போர் செய்ய வந்த அதி சூரனே! பொறு, பொறு, போகாதே எனக் கூறி (அவனை) அழித்த திறமை வாய்ந்தவனே!