பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 299 சடா மகுடத்தவனாகிய சிவபிரான் ஆணையிட்டப மேன்ம்ையுற்ற குலத்தில் ஒரு செட்டி யிட்த்தே தோன்றி, அருளும் ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன் என்னும் பெயருடன் அன்புடனே - சனகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர் என்னும் முநிவர்களுக்கு அருள் பாலித்தவன்ே உண்மைப் புலமையைத் தெரிவிக்கும் சங்கப்ப்லகையில் வி ற்றிருந்த (நான்குபத்து பது) நாற்பத் தொன்பது புலவர்களுக்கும் - வேறுப்ாடு இல்லாத ழிேயின்ே பகுதியின் வழியே உள்ள இலக்கண இலக்கிய முத்தமிழில் அகப்ப்ொருள் விளக்க்த்தைக் குற்ற்ம் அற உணர்வித் தருளிய ஞான மூர்த்தியே! சற்குருநாதனே! பவளக்கொடி சுற்றிய அழகிய கமுக மரத்தின் உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் (உதிருவதுபோல 蠶 உதிர்கின்ற பழநிப் பதி மலையில் ற்றிருக்கும் குமரப் பெருமாளே! (பொறிச்சியர் கட்கடையிற் படுவேனோ!) 'இதனால் தமிழ் அகப்பொருளுக்கு ஞானார்த்தமும் உண்டு என்னும் அருமை விஷயம் அறியக் கிடக்கின்றது. ஆரியமும் தமிழுமே ஆதியிற் கடவுளால் உண்டாக்கப்பட்ட மொழிகள் அவ்விரு மொழிகளிலும் எல்லாப் பொருள்களும் உண்டு என்பதற்கு மேற்கோள்: திருமூலர் திருமந்திரம் "ஆரியமுந் தமிழும் முடனே சொலிக் காரிகை யார்க்குங் கருணைசெய் தானே" எனவும், 'அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ் விரண்டும் உணர்த்தும் அவனை யுணரலு மாமே " எனவும் கூறியிருத்தல் காண்க. இவ்வுண்மை யுணராதார் தமிழ் அகஸ்தியரா லுண்டாக்கப்பட்டதென்றும் அது வடமொழிபோற் சிறந்ததன் றென்றுங் கூறுவர். அகஸ்தியர் ஆதிகாலத்தில் தாம் சிவபெருமானால் உணர்ந்த