பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 305 என் நிறைவும் அறிவும் உறவும் போன்ற (உனது) விளக்கம் உற்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும். பருத்த மலையாம் (இமகிரியின்) பெண்ணை (பார்வதியை) மணந்த பரமசிவன் அருளிய முருகோனே (குழந்தையே!) வயலில் உழவர்கள் ஏர்க்கால் கொண்டு அழுந்திப் பதிய உழுகின்ற் பழைய பழநியில் வீற்றிருப்பவனே! திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க, உருவிச் செல்லும்படி அருமை வாய்ந்த ரெளஞ்ச மலைமீது (வேலாயுதத்தைச்) செலுத்தியவனே! வேலும், மயிலும், அறமும், நிறமும் (ஒளியும்), அழகும் கொண்ட பெருமானே! (திகழும் அடிகள் தரவேணும்) 130 சுற்றத்தாரும் உள்ள இல்வாழ்க்கையும் இனிமை தரும் செல்வமும் ஆட்சியும் (என்னை) விட்டு விலகும்படி - கடுமை கொண்ட யமன் திண்மை கொண்ட (பாசக்) கயிற்றை (என்) தலையைச் சுற்றி எறியாதவாறு - தாமரை போன்றதும், சுத்தமானதும், மரகதம் போலவும், மணி போலவும், பொன் போலவும் அருமை வாய்ந்த (உனது) இரண்டு திருவடிகளைத் - தியானிக்கும் கருத்தை (எனக்கு) அருளி என்னுடைய தனிம்ை (திக்கற்ற நிலை) நீங்கும் வண்ணம் அறிவைத் தந்தருள வேண்டுகின்றேன்; குமரனே! போர் வல்ல முருகனே! பரமனே! விளங்கும் பழநி மலையோனே! கொடிய மத யானையை (வள்ளி தன்னை அணைய வேண்டும் என்னும் கருத்து நிறைவேற) முடுகி எதிர் வரும்படி செய்த குறச் சிறுமி) மணவாளனே!