பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 395 திரிபுரத்திலுள்ளோர் தூளா மாறும், மிக்கு வந்த அந்த மன்மதனைக் கண்ணால் (விழித் தீயால்) (இறந்து) விழுமாறும், செய்த சிவ சொரூப மகேசுரனுடைய (பெருமை) மிக்க குமரனே! கோபத்துடன் வந்த சூரர்கள் வேர் அறும்படியும், அமரரும், வானவரும், வாட்டமுற்றிருந்த தேவர்களும் சிறையி னின்று விடுபடும்படியும், கூரிய வேலைச் செலுத்திய முருகோனே! அன்பு பூண்டவளாய், தாமரையே இருப்பிடமாகக் கொண்டுள்ள இலக்குமியின் கொங்கையைக் கூடுபவராம் திருமால், ஹரி நாராயணர், பழைய மாயவர் - ஆகிய மாதவமூர்த்தியின் அழகிய மருகனே! பாம்பாகும் அணியைப் பூண்ட (அல்லது பாம்பின் சிறந்த மணியைப் புண்ட) தேவி, கிருபாகரி (ஆகிய பார்வதி)யின் குமரனே! பதினான்கு உலகத்தவரும் புகழ் கின்ற பழநி மாமலை மேல் உறைகின்ற பெருமாளே! (இருகமல மீதினிலே வரவே அருள் புரிவாயே) 171 யானையின் இரு மருப்பென்னும்படி கொங்கைகளை அசைத்து, ஆடி, நல்ல கயல்மீன் போன்ற கண் பார்வை கொண்டே (தமக்கு அளிக்க வேண்டிய) பொருள் அளவைப் பேசி ஆடையை யிழுத்தும், குலுக்கென நகைத்தும், மயக்கக் கேட்டைக் கொடுத்தழைத்துப் படுக்கையிலே -