பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 401 ருத்ர மூர்த் தியும் விளக்கம்பெற வேண்டி(எனக்கு உபதேசித்தருளுக என உன்னை) அணுகிக் கேட்க, (அவருக்கு நீ உரைத்த) இரகசியங்கொண்ட அப்பொருளை (அடியேனுக்கும்) நீ உணர்த்தும் படியான நாளொன்றை அடிமை பெறலாகுமோ (அத்தகைய நாள் அடியேனுக்குக் கிட்டுமா?) மலையையும், உருவிற் பெரியராம் அரக்கர்களையும், ஒலிக்கின்ற ஏழு பூமியையும், (அல்லது ஏழு வகையான) கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருமையுள்ள மயில்மீது வரும் முருகன்ே! பதிக்கப்பெற்ற மரகதத்தினுடன் ரத்ன மணிகள் வரிசையில் அமைக்கப்பெற்ற பல ஆபரணங்களை அணிந்துள்ள பன்னிருபுய மலைகளை உடையவனே! விரிவாக இயற்றமிழ் உணர்ந்த வயலூர் முருகனே! திருப்புகழை உரைப்பவர்களுடையவும், படிப்பவர் களுடையவும் வறுமையையும், பகையையும் தொலைத்து வெற்றி தந்தருளும் இசைப்பிரியனே! திருந்திய ஒழுக்கத்தை உடைய சிறந்த தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே! வில்லை ஏந்திய குறவர்களுடைய ஒலைக் சையிலும் (தழை வேய்ந்த குடிசைகளிலும்), (Sಿ கருமைபோற் கரிய (அல்லது புகைகளின் க த் தன்னகத்தே கொண்ட) மேகங்கள் ಹ್ಲಿ தவழ்ந்து செல்லும் திருப் பழநி மலையிலும் வீற்றிருக்கும், திருக்கையில் வேல் ஏந்தும், அழகிய பெருமாளே! (பொருள் உணர்த்துநாள் அடிமையும் உடையேனோ) (கரந்துறை பாடலின் பொருள்) கருத்தொடு உபாயச்சொல் செய்தின்ற மடமாதர்களால் கலக்கம் அடையும் மோக மயக்கில் மயங்காமல், 'திருப்புகழை உரைப்பவர், படிப்பவர் தம் வறுமை, பகை தொலைக்கும் முருகனே என்னாத இசைப் பிரியனே என்றதால் திருப்புகழை இசையின்றி ஒதுதலைக் காட்டிலும் திருப்புகழை இசையடன் ஓதல் முருக வேலனுக்குப் பன்மடங்கு இன்பம் தரும் என்று தெரிகின்றது.