பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புக ழ் உரை 409 176 ரத்தம், மலம், சலம் இவை ஒழுகுகின்ற மனிதக் குடலையும் சிறிய புழுக்கள் நெளியும் உடலையும் கொண்டு, மதம் கொண்ட விகார ரூபங்கொண்டவனாய், கொழுப்பு, சதை ஊறி எழும் சேறுபோன்ற சளி இவையெல்லாம் உடலினுள்ளே - குடியிருப்பவர்கள் போலப் பலவும் கொண்டு, பலமான குமர் (கண்ட) வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி எனப் பெயர் பூண்டு, கொடுமை என்னும்படி நோய்களெல்லாம் வேதனை செய்யும் இவ்வுடலைப் பலமாக விரும்பியவனாய் உள்ள நான் - (மாதர்களுடன்) கலந்து, காமனுடைய உள்ளமும் (பொறாமையாற்) கரிந்துபோகப் புளகாங்கிதமும், மணிகளும் பூண்ட மலைபோன்றதும், பலகறை (யன்ன நகைகளும்), மலரும் புனைந்து காமசாத்திரத்திற் கூறியபடி, திரட்சி கொண்ட மலைபோன்றதுமான கொங்கைகளில் மயக்கம் கொள்ளாமல் - மனது துயர் ஒழிய, வினைகள் சிதறுண்டு போக, காம நோயும், (கற்ற) (வீணான - காம) கலைகளும் (என்னை ட்டு) விலக, (என்) மனம் பக்குவநில்ையை (சாந்த நிலையை) அடைய, என்னுடைய தலையில் (உனது) திருவடியைச் சூட்டி) அருளுவாயாக - அசுரர் பொடிபடும்படியும், தேவர்கள் (தங்கள்) ஊரைப் பெறும்படியும், 鷺 நாகாஸ்திரம், சக்ராயுதம் (ஆதிய எதிர்த்து வரும் படைகளின் உச்சிகள் சிதறுண்ணவும். (அல்லது அளையில் (புற்றில்) பாம்பு இருப்பதுபோல மலைக்குகைகளில் ஒளித்திருந்த) நிசிதர் (அசுரர்களின்) முடிகள் சிதறுண்ணவும் மலைகள் நெறுங்கிப் பொடிபடவும், கடல் எரியுண்ணவும் செலுத்தின் ஒளி வேலனே! நிரம்ப மலர்களைப் பொழிந்து தேவர்களும் முநிவர்களும் அரசே! குருபரனே! குமரனே! சரணம் எனப் பணிய, பெரிய மேகபடலம் கிழிபட்டு (பிரிந்து) தோன்றக் களித்தெழும் வாகனமாம் மயிலை உடையவ்னே!