பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 427 183 பஞ்சபாதங்களும் செய்தவன், பாவி, முழு மூடன், மிக்க வஞ்சகத்தொடு, கூடிய பேராசைக்காரன் (அல்லது வஞ்சகன், ஈதற் குணமே இலாதவன்), சூது கொலை இவை செய்யும் பேர்வழி, அறிவில் நல்ல பண்பையே கொள்ளாதவன், பாவமாகிய கடலுள் நுழைகின்ற செருக்கிலும் ஆசையிலும் - பங்குகொண்டவன் (அல்லது, செருக்கு ஆசை என்னும் குற்றம் உடையவன்) ஆகிய நான், தாக்குண்டு அந்தப் ப்ாழ்நரகில் வீணாக விழும்படி - பெண்டிர், வீடு, பொன் (ப்ெண், மண், பொன்) என்னும் மூவாசை கொண்டு தேடியும், ஒரு நொடிப்பொழுதிலே, மறைந் துகிடக்கும் ஐம்பெரு மலங்களுடனும் (ஆணவம், கன்மம், மாயை, ம்ாயேயம், திரோதான்ம் என்னும் ஐவகை மலங் களுடனும்) பாசங்களுடனும் கூடி, மிக்கமோசக்காரராம்ஐந்து பூதங்களாகிய அந்தப் பொல்லாங்கு செய்பவர்களாகிய அவர்களுடைய வியாபார காரியங்களல்லாமல் (வியாபார காரியங்களிற் கலவாமல்) அருள்பெற்ற அன்பர். களிடத்தே கூடி யறியாத புகழையே கொண்டுள்ள அடியேனாகிய நான் - தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியாம் சந்திரசேகரமூர்த்தியும், பாவையாம் தேவி பார்ப்பதியும் கூடி விளையாடுகின்ற ஸ்படிகம் போலத் தாவள்ளியமான நாடாகிய சிவலோகத்தில் (உள்ளவர். களுடன்) கூடிவிளையாட அருள்புரிவாயாக; வஞ்சநிறைந்த பெரிய சூரனும், அவனது சேனையும், கடலும், கிரெளஞ்சகிரியும் ஒடுங்கவே, சூரியன்போல் ஒளிவிடு. கின்ற வேலாயுதத்தைச் செலுத்தின அழகிய கையனே! கடப்பமலர் மாலை விளங்கும் திருமுடியை உடைய முருகனே!