பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கயிலை மலை) திருப்புகழ் உரை 101 தீமைகளும், தொடர்ந்துள்ள வினைகள் எல்லாமும் பொடிபட்டு அ ழிய ஜீவாத்மா ஆனது பரமாத்மாவாம் சிவனது சொரூபமே என்னும் உண்மையை உணர்ந்து - (அவ் வுணர்ச்சியின் பயனாய்) நான் என்னும் அகங்காரம் தொலைந்து, உயிர், ஊன் என்னும் உணர்ச்சியும் (பற்றும்) அழிந்து, பரவெளி ஒலியாம் பரப்பிரம ஒளியிடத்தே ஞானம் பெருகி எழ மகிழ்ச்சி தரும் ஆனந்த சித்தியை அடைந்து நாள் தோறும் நான் மகிழ உனது திருவடியை அருள்வாயே பொன்னுலகம் தழைக்க, அடியேனும் செழிப்புற, பிரமனும் மாலும் பிை ழக்க, கடல் விஷத்தை (ஆலகால விஷத்தை) ஒடுங்கும்படி ஆள (தான் ஆண்டு உண்ண) வாரிய கரங்களை உடையவன், எம்மை ஆள்கின்ற தகப்பன், மழு மான் (ஏந்திய) கரத்தன் ஈன்ற முருகனே! (பெற்ற குழந்தையே!) தானந் தனத்த தனனா - என்று வண்டு சுற்றி மொய்த்து தேனை உண்கின்ற கடப்ப மலரை அணிந்துள்ள மார்பனே; (எனது) நிலைமையைக் (கண்டு) குறித்து எம்மை ஆள்கின்ற பெருமாளே! திருக்கயிலைப் பெருமாளே! மிக்க அன்பு காட்டின குறத்தி (வள்ளி) மகிழ்கின்ற (அல்லது குறத்தியை மகிழ்ந்த) பெருமாளே! (பதம் அருள்வாயே) 240 சிரித்து, (மனத்தை) உருக்கி, விழி விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, விதம் விதமாக (பலவிதமாக) அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சமர்த்தைக் காட்டி, முகத்தை மினுக்கி, நல்லபடியே அணைத்து, பேச்சினாலும்.