பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருமலை திருப்புகழ் உரை 109 அஞ்சி நடுங்கி, மிகவும் மனதை அவர்கள் பால் பெருகிப் பாய வைத்து, அவர்களை நயந்து வேண்டியும், அவர்களால் கலக்கம் உற்றும், தினந்தோறும் அழிவேனோ! செகக்கச் செகக்க செக்க ...திமித்தித் திமித்தி தித்தி என்று கூத்தாடுகின்ற உலகுக்கு ஒருத்தராய் (ஒப்பற்றவராய்) நிற்கும் சிவபிரானுடைய குமரனே! நினைத்துத் துதிக்கின்ற பக்த ஜனங்களுக்கு (அடியார் கூட்டத்துக்கு) இனிமையான பேற்றை அருள்பவனே! மேற் சென்று திடத்துடனே பொருந்தி, அசைத்து, மலையின் பாரத்தைப் பொறுத்து, அரக்கன் (ராவணன்) தருக்கு (ஆணவம்) மிக்குப் பெயர்த்து எடுத்த கயிலாய (மலையின்) தே வீற்றிருந்து அந்தக் கயிலை மலைக்கு அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரெளஞ்சத்தை பொடியாம்படித் தூள் செய்து அடக்கித் தொகையல் செய்துவிட்ட பெருமாளே! (அணைவார்பால்...மனத்தை. ..அழிவேனோ り 244 ஒரு பத்தும், இருபதும், அறுபதும் (அவையுடன்) ஆறும் (ஆகத்) தொண்ணுாற்றாறு தத்துவங்களின் தன்மையை உணர்ந்து, (உனது) இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் விரும்பி நாடி(மனம்) உருக, முழுமதியின் தீப்போன்ற ? வீசும் பரவெளியின் ஒளிபெறக் கலவாது (சேருதற்கு முயற்சி செய்யாமல்), முன் பக்கத் தொடர்ச்சி

  1. முழுமதி வெளி இதனையே "(தவத்துணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே" - என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 398).