பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 165 266 சின்ன எள்ளு, தினை, சிறு மணல் இவைகளின் அளவுள்ள உடல்களிற் பொருந்தின (பிறவி) எத்தனை முழங்கும் கடலில் உயிர் பெற்று வாழ்ந்த (பிறவி), எத்தனை, திரண்ட கயல் மீன் எனப் பல வகையனவாய்! அது போதாமல் சென்மித்த (பிறந்த) பிறப்பு எத்தனை மலையிலும் சுனையிலும் உலகில் (பிறந்து) செழிப்புற்ற (பிறவி) எத்தனை! அற்பமான கொங்கை மீது மோகங் கொண்டு உடம்பெடுத்த (பிறவி) எத்தனை (இங்கன்ம் தோன்றி) யமன் உயிர் பறித்துப் போவதற்கு ஒரு அளவு (கணக்கு) உண்டோ! (மாநுடப் பிறவியில்) மனத்தில் எத்தனை எண்ணங்கள் வஞ்சகமானவை: குடி கெடுத்தது எத்தனை: மிருகம் போலப் பிற உயிர்களை வதைத்தது எத்தனை, (இதற்கெல்லாம்) அளவே இல்லை(கணக்கே இல்லை; விதியின் போக்கு தவறாதபடி உண்டான நிகழ்ச்சி எத்தனை (இங்ங்னம் எல்லாம் தோன்றி இளைத்த இந்த) கொசு போன்றவன், மூடன், (அல்லது பிடிவ்ர்தம் உள்ளவன்), மடையர் கூட்டத்திற் சேர்ந்தவன், அறிவழிந்த காமம் (ஆசை) கொண்டவன் - ஆகிய நான் (உனது) ம்லர்டியில் உருகும்ப்டி இனி அருள் புரிவாயாக தனத்த னத்தன தனதன தனதன.... .... . தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதிதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி ... ... ... டடுடுடு டுடுடுடு (என்று தனித் தொலிக்கும் மத்தளம், உடுக்கை இவைகளின் வெற்றி ஒலி கடல் போல முழங்கக் கோபத்துடன் நடக்கும் போர்க்களப் போரில் தோன்றி யெழும் ரத்தம் ஒலியுடன் பெருக, யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், வில்லுகளும் குலைந்து முறிபட் கழுகும் நரியும் தின்ன (உண்ண), மாமிசங்கள் மீதிருந்து சண்டை செய்த வேலனே!