பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ல் ஆவணப் பதிவுத்துறையில் வேலைக்கமர்ந்து அத்துறையில் மேலதிகாரிகளால் பாராட்டப்பெற்றுப் படிப்படியாக உயர்ந்து சென்னை ஆவணத்துறையில் தலைமை அதிகாரியின் நேர்முக உதவியாளராக (Aut IG, of Registration) gua Qupi, \ இவர் தம் அலுவலினின்று ஓய்வு பெற்றபின் திருத்தலங்கள் தோறும் சென்று வருதலையும் நாடோறும் திருப்புகழ் கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் வேல் வகுப்பு ஆகிய சமய நூல்களையும் கல்லாடம் பரிபாடல் குறுந்தொகை ஆகிய சங்க நூல்களையும் மனப்பாடம் செய்தலையும் மேற்கொண்டார். இவர் ஆவணப் பதிவுத் துறையில் பணியாற்றிய போது பதிவு முறைகளில் காணப்பட்ட பல்வேறு பிரிவுகளையும், அவை பற்றிய விளக்கக் குறிப்புகளையும் கண்டபோது தாம் பல்லாண்டுகளாக ஈடுபாடு கொண்டிருக்கும் சைவத் திருமுறைகளுக்கு இப்படியொரு விளக்க நூலை எழுதினால் நலமென்று கருதினார். அதன் விளைவாகத் தோன்றியனவே அவர்தம் ஒளிநெறி நூல்களும் ஒளிநெறிக் கட்டுரைகளுமாகும் அவ்வகையில் அவர் இயற்றிய நூல்கள் தேவார ஒளிநெறி மூன்று பகுதிகள், தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி திருவாசக ஒளிநெறிக்கட்டுரை திருக்கோவையார் ஒளிநெறிக்கட்டுரைமற்றும் திருவிசைப்பாஒளிநெறி முதலியன தணிகைமணி அவர்களின் இத்தகைய அரிய இலக்கியப் பணியினைக் கண்ட கழக ஆட்சியாளர், தாமரை செல்வர் வசுப்பையாபிள்ளை அவர்கள் இவருக்குத் தமிழகப்பல்கலைக்கழகங்களுள் ஏதேனும் ஒன்றின்வழிபாக்டர் பட்டம் வழங்கச் செய்தல் வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 19ல் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பெற்றது. தணிகைமணி அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் ஆராய்ச்சியிலே அதிலும் சிறப்பாகச் சமய நூல்களை ஆராய்வதில் பேரீடுபாடு கொண்டிருந்தார்கள். இங்ஙனம் வாழ்வாங்கு வாழ்ந்த இப்பெரியார் 11ஆம் ஆண்டு ஆண்டு தின் ஆம் தன் இண்ைடிர்ே அன்னரின் தமிழ்த் தென் வாழ்வதாக % % %