பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று திருத்தணிகை திருப்புகழ் உரை 237 292 (உணவு தரும்) பார் (மண்), அப்பு (நீர்), ஆடல் தி. (அசைகின்ற நெருப்பு), மொய் (நெருங்கி வீசும்) கால் (காற்று), சொல்லப்படுகின்ற (புகழப்படுகின்றதும்), பா (பரப்பு உள்ளதுமான) வெளி (ஆகாயம்), ஆகப் பஞ்ச பூதங்கள், (சத்துவம், இராசதம், தாமதம் எனப்படும்) முக் குணங்கள் ஆசைகள் (மண், பெண், பொன் என்னும் மூவாசைகள்). இவைகள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும், கிழிந்த தோலிட்டு சுற்றி மேயப்பட்டதும், காம நோய் தோய்ந்துள்ளதுமான இந்த பாவத்துக்கு ஈடான் உடலின் மேல் ஆசைப்படுதலை மேற்கொண்டு உலகில் (மேலும் மேலும்) நான் பிறவாமல் உன்னை ஏத்தாதாருடைய (பக்தி செய்யாதவர்களுடைய) கல்வி சாமர்த்தியத்துக்குக் கிட்டாததும், எட்டாததுமான (உனது) திருவருளை (எனக்குத்) தரவேணும்; தவறாது (உன்னைப்) பாடித் தொழுபவர் யார் யாரோ அவருடைய வினையைப் போக்குபவனே! தற்கு (செருக்கும்), ஆழி (ஆக்ஞாசக்கரமும்) கொண்ட சூரனை அழித்தவனே! மெய்ஞ்ஞான மூர்த்தியே! தணிகையில் (வீற்றிருக்கும்) ஒப்பற்ற வேலனே! அந்த சர்க்கரை வெல்லத்தையும், பாலையும் ஒத்த சொற்களை உடைய (தினை) காவல் பூண்ட பெண் (வள்ளியின்) கொங்கையை அணைந்தவனே! அத்தனே (உயர்ந்தோனே)! நித்தனே (என்றும் அழியாதவனே)! முத்தனே (இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனே) சித்தனே (சித்து மூர்த்தியே) அப்பா குமரப் பெருமாளே! (அருளைத் தரவேணும்)