பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/781

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண் டமரஞ்ச மண்டிவந் திடுசூரன். அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங் கிடஅன் றுடன்றுகொன் றிடும்வேலா; மரைவெங் கயம்பொருந் திடவண் டிணங்குவிந் திசையொன்றமந்தி'சந் துடனாடும். வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் பெருமாளே (10) 323. நினைக்க தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதான tவரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன விழியையு கந்துமு கந்து கொண்டடி வருடிநி தம்பம ளைந்து தெந்தென sஅளிகாடை மயில்குயி லன்றிலெ னும்பு எளின்பல குரல்செய்தி ருந்துயி னுந்தி யென்கிற மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் மெழுகாகி, வள்ளிமலையில் சந்தனக் காடு இருந்தது என்பது: "உயர் சந்த னாடவி யினும்உறை குறமகள்" திருப். 289 அங்கே குரங்குகள் விளையாடின என்பது: தேனைப் பருக மர்க்கட சமூகம் அமை தொட்டு இறால் எட்டு வரை" பூத வேதாள வகுப்பு. (அமை - மூங்கில்) t வரைவின் மகளிர் - "தந்நலம் விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்ப தல்லது அதற்கு ஆவார் ஆகாதா ரென்னும் வரைவு (அளவு இலாத மகளிர்" (திருக்குறள் - அதி 92) ! பாடபேதம் :- தங்கள் பங்கய S புட்குரல் பாட்டு 197 பார்க்க (அடுத்த பக்கம் பார்க்க)