பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை திருக்கற்குடி (இது திரிசிராப்பள்ளிக்குத் தென்மேற்கு 2 மைல். உய்யக் கொண்டான் என வழங்குகின்றது. வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது. மூவர் தேவாரமும் பெற்றது.) 345. திருவடியைப் பெற தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனதான 'குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக் குவட்டைச் செறுத்துக் ககசாலக். குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக் குருத்தத் துவத்துத் - tதவர்சோரப், புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப் புறப்பட்ட கச்சுத் தனமாதர். புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப் புரித்துப்பதத்தைத் தருவாயே! - 'முதல் மூன்றடி கொங்கையின் சிறப்பைக் கூறும் வர்ணனை: குடம் உடையும், கொங்கை உடையாது; யானையைக் காட்டுக்குள் துரத்தலாம். கொங்கையை அங்ங்ணம் செய்யலாகாது; மலையை அடக்கியுள்ளார்கள் அகத்தியரும் இந்திரனும், கொங்கை அங்ங்ணம் அடக்கப்படவில்லை; சக்கரவாகப்புள் ஆணும் பெண்ணும் இரவில் இணைபிரிந்து வருந்துவதாகக் கூறப்படும், கொங்கைக்கு அந்தக் குறைவு இல்லை. (மேருவுடன் பகைத்து விந்தமலை மிக வளர்ந்து அகத்திய முநிவற்குப் போவதற்கு வழி கொடாமல் இருக்க, அந்த விந்தம் பாதலத்தில் அழுந்தும்படி அகத்தியர் அதை அடக்கினர் - (கந்த புராணம் 1-25) மலைகளின் சிறகை இந்திரன் அரிந்தனன் - பாடல் 216 - பார்க்க (அடுத்த பக்கம் பார்க்க)