பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/908

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விநாயகமலை திருப்புகழ் உரை 435 வேதனைப்பட, மகா மேருமலை இடிபட்டுப் பொடிபடவே, அசுரர்களின் வலிமை கெட மிக்க வேகமுள்ள நெடு வேலைச் செலுத்தினவனே! மரகதம் போன்ற (பச்சை நிற) உருவம் உள்ள ஆயன் (இடையன்) திருமாலும், பொன் உருவம் உள்ள பி ரமனும், நெருப்பு உருவம் உள்ள ஈசனும் (உனது) திருவடியை விரும்பிப் போற்ற - - மயிலில் வீற்றிருக்கும் வாழ்வே விநாயக மலையில் வீற்றிருக்கும் வேலனே! பூமியைத் தாங்குபவனே! அல்ல துமலைகளுக்கு உரியவனே! அல்லது - மலையில் வாழ்பவர் களாகிய, (வனத்தில் சஞ்சரிப்பவர்களாகிய) வேடர்களுக்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமாளே! (அருள்தாராய்)