பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1006

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகபட்டினம்) திருப்புகழ் உரை 447 பேசவும் வாய்வராத பேர்வழிகளை மகா கீர்த்தி வாய்ந்த பிரபு என்றும், முட்டாளைச் சமர்த்தர் இவர் என்றும், (ஊனரை) குற்றம் குறை உள்ளவரை பிரவு இவர் என்றும், என்னுடைய அறிவீனத்தால் அழகிய முத்தமிழ் நூல்களை (உலக) ஆசை கொண்டுள்ள பேர்வழிகளிடம் சொல்லிநின்று, கணக்குக் கடந்த (எண்ணிலாத) கோடிக் கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து விணே திரிகின்ற அடியேன். கோபம் என்பதை ஒழித்து, பின்னும் அந்த ஆசை எனப்பட்டதையும் ஒழித்து, உன்னைப் பணிந்து (உன் திருவடியைக்) கூடுதற்கு முத்தியை என்று தந்தருளுவாய்! வாலை (என்றும் இளையாள்), துர்க்கை, சத்தி, அம்பிகை, உலக கர்த்தா ஆகிய பித்தராம் சிவபிரானது (இடது) பாகத்திலே உள்ள தேவி பெற்று எடுத்து மகிழ்ந்த சிறியோனே! கடல் வற்றிப்போகக் கிரவுஞ்சம் துாள்பட்டு விழ, நெடிய வேலைச் செலுத்தின வெற்றி பொருந்திய, மற்போருக்குத் தக்கதான புயங்களை உடைய வலிமைவாய்ந்த மயில் வீரனே! பூமி மண்டலம் முழுமையும் உண்டு, ஆதிசேடன் என்னும் பாம்புமெத்தையில் துயில் கொண்ட நாராயணனுக்கு அருள் பாலித்த மருகனே! நான்கு திசைகளிலும் ஐயம்கொண்ட சூரபத்மாவை அடக்கி ஒடுக்கிய (பெருமாளே) நாகபட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (முத்தியென்று தருவாயே) 833. வலிய மார்பிடத்தில் - நளினம் - தாமரை மொக்கு எனவும், கிரிமலை எனவும் (சொல்லத்தக்க) தனமொடு - கொங்கையொடு, (ஆரமும்) முத்துமாலையும், படிந்த மேன்மையான தேமலுடன் ஆபரணங்களும் மாலையாயமைந்த ஒள்ளிய பவளமும், நறுமணச் சந்தனக் குழம்புடன் (பூ) மாலை அசைய. X விஷ்ணுமூர்த்திக்குச் சிவசாரூப்பிய மளித்தது - பாடல் 458 பக்கம் 27-கீழ்க்குறிப்பு. திருத்தணிகையில் வேலனைப் பூசித்துச் சக்கரம், சாரங்கம் இவைகளை நாரணர் பெற்றார்:- ஆதி சார்ங்கமும்...சாமியளித்தனன். தணிகைப் புராணம் - நாரணன் அருள்பெறு படலம்-22. 0 மார்புரம் பின் - புரம் பின்மார்புரம் - உடல், பின் இடம், மார்-மார்பு உரம் மார்பு - வலிய மார்பு இடம்.