பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1054

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவடுதுறை) திருப்புகழ் உரை 495 முநிவர்கள், தேவர்கள், முறையோ முறையோ என உன் முன்பு ஒல மிட, பழைய சூரனது மார்பின்மேல் செலுத்தின வேலனே! திருமாலும் பிரமனும் அறியாதவராகிய சிவபிரானது மேன்மை(ச் சிறுவனே) புதல்வனே! திருமாலின் மருகனே! செழிப்புள்ள அழகிய மதில் சூழ்ந்த அழகு நிறைந்த சோலை சூழும் திருவீழி மிழலையில் வாழும் பெருமாளே! (முருகா, குமரா, உயிர்கா என ஒதருள் தாராய்) திருவாவடுதுறை 852. (துதிக்குஞ் சொற்களில் பிழை ஒன்றும் வராமல் உன்னை நிரம்பத் தோத்திரம் செய்து, நிற்பது என்பதே வராத-ஒய்ந்து நிற்பது எனபதே இல்லாத ஒயுதலின்றி மேலும் மேலும் வரும்-பிறப்பாகிய (கடத்தில்) காட்டில் சுழலுண்டு சுக்கிலம் மூலமாய் (அவதாரம் ஆகும்) பிறப்பு எடுக்கின்ற வழியில் இணங்கிப் பொருந்தி மகிழ்ச்சி பூண்டு விலைமாதர்களின் (துப்பு இறையதான) பவளம் தங்குவதான-பவளம் போன்ற வாயிதழ் ஊறலாம் பழத்தின் ருசியில் (எனது) எண்ணத்தை வைத்து, காம மயக்கம் கொண்டு மனத்தை அந்தக் காம மயக்கத்தின் வழியே செலுத்தி, (கடுத்த) மிக்குள்ள (துற்சன)பொல்லாதவர்களான-துர்க்குணம் உடையவர்களான (மகா காதகர்களை) மகா கொடியவர்களை இப் பூமியிலே வளப்பம் பொருந்தி செல்வம் நிறைந்த + சொற்பிழை வராத வண்ணம் பாடவேண்டும் என்பது அருணகிரியாரின் உபதேசமொழி: இங்ங்ணமே எழுத்துப் பிழையும் வரக்கூடாது என்று கந்தரலங்காரத்தில் (2). "அயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்" என உபதேசித்துள்ளார். இந்த உபதேச மொழிகளை அடியார்கள் அவசியம் பின்பற்றி நடக்கவேண்டும். X ம காதகரை - மகா காதகரை,