பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1095

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 865. சிவஞானம் பெற தனதனதன தான தானன, தனதனதன தான தானன தனதனதன தான தானன தந்ததான புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன புளகிதஅபி ராம பூவித கொங்கையானை. பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி பொருவனகணை போல்வி லோசன வந்தியாலே, மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன வெகுவிதபரி தாப வாதனை கொண்டுநாயேன். மிடைபடுமல மாயை யால்மிக கலவிய அறி வேக சாமிநின் விதரணசிவ ஞான போதகம் வந்துதாராய், எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென (ԱՔ வீச மேதினி யிடர்கெடஅசு ரேசர் சேனைமு றிந்துபோக இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட ரணமுககண பூத சேனைகள் நின்றுலாவச் *செழுமதகளி நீல கோமள அபிநவமயி லேறு சேவக செயசெயமுரு காகு காவளர் கந்தவேளே. t திரைபொருகரை மோது காவிரி வருபுனல்லுயல் வாவி சூழ் தரு திருவிடைமரு தூரில் மேவிய தம்பிரான்ே. (4)

  • முருகவேளுக்கு யானை வாகனமும் உண்டு, அந்த யானை

பிணிமுகம் எனப்படும்-பாடல் 207பக்கம் 28, பாடல் 474-பக்கம் 71 கீழ்க்குறிப்பு. 1 எறிதிரை கரை பொரும் இடைமருது - சம்பந்தர் 1-122.2 பொழிலும் வயலுஞ் சூழ்ந்த இடைமருது 2.56.8