பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பெரும்புலியூர், (இது திருவையாற்றுக்கு மேற்கு 21/2 மைல் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடையபாடல்பெற்றது.) 895. திருவடியைப் பெற தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் புயமீதே. தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் குழலாரோ. டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே, சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் றிடுவோனே. சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே,

  • பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்

ப்ரசண்டஅபி ராமிக் கொருபாலா. பெரும்புனம தேகிக் குறம்பெனொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் பெருமாளே.(1)

  • பெதும்பை - 8 முதல் 11 வயது வரையுள்ள பெண் 'அந்தரி நீலி அழியாத கன்னிகை" - அபிராமி அந்தாதி.8 'அகிலாண்ட கோடி யீன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே"

தாயுமானவர் - மலைவளர்-5 "பெற்றாள் சக தண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் முற்றா முகிழ் முலையாள்" -வில்லிபாரதம் அருச்சுன தீர்த்த-15.