பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நெடுங்களம் (திரிசிராப்பள்ளிக்கு அடுத்த திருவெறும்பியூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கு 7 மைல் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 896. கவலையற தந்ததன தந்ததன தந்ததன தந்ததன - தநததன தநததன தநததான பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள் பஞ்செனன் ரிந்துபொடி யங்கமாகிப். பண்டறவு டன்’பழைய தொண்டர்களு டன்பழகி t பஞ்சவர்வி யன்பதியு டன்குலாவக் குஞ்சரமு கன்குணமொ டந்த வனம் வந்துலவ Xகொஞ்சியசி லம்புகழல் விந்துநாதங். கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென் கவலை கொன்றருள்நி றைந்தகழ லின்றுதாராய், எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல இன்பரச கொங்கைகர முங்கொளாமல். Oஎந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள இந்துநுத லும்புரள கங்குல்மேகம்,

  • தொண்டர்களுடன் பழகினால் வினை பொடியாகும்.

"விண்டொழிந்தன நம்முடை வல்வினை.தொண்டரோ டினிதிருந் தமையாலே" - சம்பந்தர் 2-106.2. t பஞ்சவர் வியன்பதி - பாண்டியர்களின் பெருமைத் தலைநகர் - கூடல்.ஆதலால் (பஞ்சவர் வியன்பதியுடன்) கூடலுடன் - குலாவ கூடிக் குலவ என்றும் ஒரு பொருள் கிடைக்கின்றது.

  1. வனம் - உறைவிடம் X ஆறாதாரங் கடந்த பெருவெளியில் சிலம்போசை முதலிய ஒலிக்கும் - என்பது - பாடல் 179-பக்கம் 416 கீழ்க்குறிப்பு.

O எந்த மீற