பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் மயை 111 490. காம ஆசையை அறிவிக்கின்ற அந்த நிலையாலும் தோற்றத்தாலும்) வஞ்சகம் கூடிய பழிப்புச் சொல் சொல்கின்ற பேச்சுக்களாலும் மான் பார்வை கொண்ட கண்களுக்கு அடுத்துள்ள மாலைப் பிறையை நிகர்க்கின்ற நெற்றியாலும் வேலை நிகர்க்கும் கண்களாலும், (அஞ்சம்) அன்னத்தின் நடைபோன்ற நிடையாலும், அழகிய கையில் உள்ள வளையாலும், (என்) அறிவு அழிபட்டு சோர்வு அடைந்து ஒடுங்கி அடியேன் மயக்கம் கொள்ளல் நன்றா? (நல்லதன்று என்றபடி) மயில் மீதேறி முன்பு ஒருகால் ஒரு நொடிப்போதில் உலகை வலமாக வந்த குமரேசனே! மானைத் தாவி நிற்கும் நிலையில் ஏந்தி உள்ள திருக்கரத்தை உடைய சிவபிரானது இடது பாதத்தில் இடங்கொண்டுள்ள மலைமகள் (பார்வதி) தந்த முருகேசனே! மேம்பாட்டுடன் வான் அளவும் உயர்ந்த அழகிய மாடங்களின் மேலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க. (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்பகலசங்களும் குடங்களும் பொருந்தியுள்ள கம்பை யாற்றங்கரை நகராகிய கச்சிநகர் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே! (அடியேன் மயங்கி விடலாமோ)