பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 637 வயலூர் 904. திருமாலின் மருகனே உன்னை வணங்குகின்றேன் என்றும், முடிவு (அந்தம்) இல்லாதவனே உன்னை வணங்குகின்றேன் என்றும், ஆறுமுக வேளே உன்னை வணங்குகின்றேன் என்றும், உன்னுடைய திருவடியை அரகர சேயே! வணங்குகின்றேன் என்றும், தேவர்களின் செல்வமே! உன்னை வணங்குகின்றேன் என்றும், செந்நிறச் சொரூபனே! உன்னை வணங்குகின்றேன் என்றும் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கின்றது, சிலம்பணிந்த பாதனே! தேவேந்திரன் தரும் மகள் தேவசேனையின் கணவனே! பாம்புக்குப் பகையான மயில் (வாகனத்தையும்) வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரனே! (கோலாகலனே)! ஒருநாளேனும் (பகர்தல் இலா தாளை) (நான் நினைத்துச்) சொல்லுதல் bலாத சொல்லாத (உன்) திருவடிய்ைச் சற்றேனும் தளவேனும் அறியாத ஏழையாகிய நான் - உன் (திருவாயால்) புதி, பசு, பாசம் எனப்படும் திரிபதார்த் தங்களாகிய நித்தியப் பொருள்களின் இலக்கணங்களைப் பற்றி உபதேச மொழிகளைப் பெற்வேண்டும். (தொடர்ச்சி) 2. கணியெனாத் தொடங்கி வயலி போய்த் தொடர்ந்த கவியினாற் புகழ்ந்து பெருமானைக் கருதிவாழ்த் துகந்து திரிசிராச் சிலம்பர் கனவு தோற்றி வந்து வருமாறே பணியிடாக் கரந்த வுடனிராப் படர்ந்த பகலி லார்த் தெழுந்து பதியேகிப் பனுவல் பாட் டறிந்து பதிகமேற் பயின்று பரவியேத்தி நின்ற பெருமாளே. -(31-3-54 தேதியிற் பாடினது). iமுருகவேள் செந்நிறத்தவன். செய்யன் சிவந்த ஆடையன் - திருமுருகாறு. சிவப்பின் செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே. திருப்புகழ் 275.

  1. பதி-கடவுள் பசு - சிவான்மா : பாசம் - மும்மலம் பதி ஞானம் இறைவனைப் பற்றிய அறிவு பசு ஞானம் - ஆன்ம

(தொடர்ச்சி 638 ஆம் பக்கம் பார்க்க)