பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்

புழுகு t மச லம்பசுஞ் சந்தனங் குங்குமந் தொகுகளய முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் திருதேர்ளுந்: தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும் பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந் துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்று

  1. செய்ப் பதிவாழ்வாய், கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்

குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் குருநாதா. கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன் Xகுறுமுனி கமண்டலங் கொண்டு முன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் - பந்துறைப் பெரும்ாளே (1) 輩 கடம்பந்துறை - (கடம்பர் கோயில்)-சிவபிரான் கண்ணுவ முநிவ ருக்கும், தேவர்களுக்கும் கடம்ப விருகூத்தில் தோன்றிக் காட்சி கொடுத்த தலம்; கடப்ப மரமே ஸ்தல விருகூடிம் இது பற்றியே கடப்பமாலை இங்குக் கூறப்பட்டது போலும் 1 அசலம் பசுஞ் சந்தனம் - பொதியமலைச் சந்தனம் முருகவேளுக்குப் ப்ரீதி - என்பதை 'கார் மலையச் சந்தனமும் வட இமயக் காரகிலும் போர் மலையக் கடவதொரு பிள்ளைக்குப் போக்குதியே" என வருமிடத்துக் காண்க - தக்கயாகப் பரணி 228 -

  1. செய்ப் பதி - வயலூர். X காவிரி - குடகு மலையில் தோன்றினதும், அகத்தியர் சிவபிரானிடம் பெற்று வந்த கமண்டலத்தினின்றும் பெருகியதும் .

கோதிலாத குறுமுனி தன்னொடும் போதல் வேண்டும் பொருபுனற் காவிரி மாது நீ" - எனச் சிவபிரான் காவிரிக்குக் கட்டளை யிட்டனர். "நீடு காவிரி நீத்தத்தை நீ யினிக், கோடி உன் பெருங்குண்டிகைப் பாலென நாடி யத்திறம் செய்தலும் நன்முனி, மாடு சேர்ந்தனள் மாநதி என்பவே" "அகத்தியன் கொங்கின்பால் வந்து அருச்சனை புரிந்து மேவும். குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர் புனற் கன்னி........பாரில் நீ படர்தி என்றான்"- கந்தபுரா 2-23-20, 26 2-27-32, 36. (தொடர்ச்சி 701 அம் பக்கம் பார்க்க)