பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்கடம்பந்துறை) திருப்புகழ் உரை 701 பூங்கொத்துக்கள் விரிந்துள்ள கடப்ப மரத்தின் மலர்கள்ாலாய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், (பொதிய) மலையில் விளையும் பசுமை வாய்ந்த சந்தனமும், குங்குமமும் கூட்டப்பட்ட (களபமும்) கலவைச் சாந்தும், ஒன்றுகூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும் எப்போதும் நன்மையே பாலிப்பவைகளுமான - ப்ன்னிரண்டு தோள்களும். அழிவு - சோர்வு - இலாத உனது முகங்களையும், தந்திர மந்த்ரங்களையும் - உனது சனைக்கு உரிய ல்களையும், மந்திரங்களையும், பழநிமலையையும், ருப்பரங்குன்றத்தையும் திருச்செந்துாரையும், துதி செய்து போற்றுகின்ற மெய்யன்பர்க் டய சிந்தையிற் புகுந்தும், வயலூர் என்னும் தலத்து வீற்றிருந்தும் வாழ்பவனே! கூட்டமான படங்களுடைய பாம்பும், கங்கையும், சந்திரனும், குராமலரும், அறுகம்புல்லும், சிறிய தும்பை மலரும், கொன்றை மலரும், நறுமணம் கமழும் சடையை உடைய சிவபிரானும் கும்பிட்டு வணங்கும் தகுதி - பெருமையைக் கொண்டுள்ள குருநாதனே! பெருமை தங்கிய குடகில் குட தேசத்தில் - Coorg)-உள்ள மலையில் - குடகுமலையினின்றும் தோன்றி வரும் - (காவிரி), சிவபிரான் தர (அல்லது - சிவனுக்கு இணையான சிவனை வழிபடும்) குறுமுன்ரி) அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளிவந்த நதியாகிய காவிரி - வந்து பொருந்தும் தென் கடம்பந்துறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ப்ெருமாளே! (தொந்தமற் றமைவேனோ) தொடர்ச்சி. நாரதர் செய்த சூழ்ச்சியால் விந்தமலை மேருமலைக்குப் போட்டியாக பிரமலோகம்வரை உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் அகத்தியரை வேண்ட, அகத்தியர் சிவபிரானை வேண்டி விந்தத்தை அடக்கும் ஆற்றலைப் பெற்றார். அப்போது சிவபூஜைக்குத் தீர்த்தம் வேண்டுமென அகத்தியர் வேண்ட, சிவபிரான் காவிரியை அழைத்து ஒரு குண்டிகையில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அந்த குண்டிகை நீருடன் அகத்தியர் தென்திசைக்கு வரும்போது - வழியில் கிரவுஞ்ச கிரியையும், விந்தத்தையும் அடக்கிக் கொங்கு தேயத்துக்கு அருகே (குடகில்) தங்கிச் சிவபூஜை (தொடர்ச்சி 702 ஆம் பக்கம் பார்க்க)