பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத் தனிச்சயத் திணிற்பிளைப் பெருமாளே. (1) 959. இறந்துபோம் அன்று அருளுக தனத்த தந்தன தனதன தந்தத் தனதத தநதன தனதன தநதத தனத்த தந்தன தனதன தந்தத் தனதான உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக் கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத் தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் குருடாகி. உரத்த வெண்பலு நழுவிம தங்கெட் டிரைத்து கிண்கினெ விருமலெ முந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் தமுமேல்கொனன்; டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் தனைவோரும். அசுத்த னென்றிட வுணர்வது குன்றித் துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்'துயி ரலமரு மன்றைக் கருள்வாயே; திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டின்டிட் டிகுதிதோ. திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட் டிடக்கை துந்துமி முரசு முழங்கச் செருக் களந்தனில் நிருதர் தயங்கச் சிலபேய்கள்:

  • "உயிர் போகும் அந்த நாளில் எனக்கு அருளுக" - இவ் வேண்டுகோளை அப்பர் பெருமானும் விண்ணப்பிக்கின்றார்:

"மிழலையுள்ளிர் இறக்கின்று நூம்மை மறக்கினும் என்னைக் குறிக் கொண்மினே". அப்பர் 4.95-10,