பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 789 சொல்லக்கூடிய வளப்பங்களுக்கெல்லாம் ஒப்பாக விளங்குகின்றதும் இருளைப் போக்கி உதயமாவதுமான நிலவொளிதானோ இது. இந்தத் திருவடி என்று சிறப்பித்தும் மலையிடங்களில் எவ்விடத்தும் உலாவி நிறைந்து (வரிசை தரும்) ஒழுங்கான காட்சியைத் தருகின்ற (பதம்) உனது திருவடிகளை (நான்) பாடி (சொல்வளம் பொருள்) வளம் கூடிய - செழுமை வளத்துடன் செந்தமிழ்ப் பாவால் (உன்னை உரைசெய) - உன்னைச் சொல்லிப் புகழுதற்கும், அப் பாடல்களைக் கேட்டு அன்பர்கள் மகிழவும் வரங்களைத் தந்து அருள்புரிவாயாக ஹர ஹர அழக ஆறுமுகத்தவனே! என்றெல்லாம் ( உனி) உன்னிதியானித் து அடியார்கள் (உன்னை) வணங்க மகிழ்ச்சி கொள்பவனே! (இமய மலையில் தோன்றிய பெருமை வாய்ந்த கொடியனைய அம்மை உமையின் பிள்ளையே (குறமகள்) வள்ளிக்கு இனிமை வாய்ந்த மணவாளனே! நினைத்தற்கும் அருமையான திண்ணிய புயங்களை உடையவனே சரவணபவனே செஞ்சாந்துக் கலவை அணிந்துள்ள அழகிய மார்பனே! (பொன்னொளி) பொன் மாடங்கள் நிரம்பிய நகராகிய மதுரை என்னும் செழிப்புள்ள தலத்தில் விளங்கி வீற்றிருந்தருளும் பெருமாளே! - (பதமதுபாடி- உரைசெய அருள்வாயே) x தமது பாடலை அன்பர்கள் கேட்டும், பாடியும் மகிழ வேண்டும். அவர்களும் கரையேற வேண்டும் என்னும் 'கருணை' நோக்கம் அருணகிரியார்க்கு உண்டு; அன்பினாலே ஏனோரும் ஒதுமாறு திதற நான் ஆசுபாடி' என்றார் பிறிதோரிடத்து (பாடல் 1129); இதனாலும் கருணைக் கருணகிரி எனப் பெயர் பெற்றனர். "காசுக்குக் கம்பன், கருணைக் கருணகிரி" ஆசக்குக் காளமுகில் ஆவனே. - தேசுபெறும் விழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி கூழுக்கிங் கெளவையெனக் கூறு" - (தனிப்பாடல்) O மார்பில் குங்குமம்: பரந்த மார்பிற் குங்குமம் நிலவிய தென்ன' - கல்லாடம் 17, For Hor ஆடக மாடம் நெருங்கு கூடல்'-(ஆடகம்-பொன்) சம்பந்தர் 1-7-1.