பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 807 (பொய்யா மொழிப் புலவர் பொருட்டு) வில்லேந்திய வேடனாய் விளங்கினவ்னே! (அல்லது, வள்ளியின் பொருட்டு வில்லேந்திய வேடனது உருவம் கொண்டு சென்றவனே): சேவற் கொடியைக் கொண்டவனே! இலக்குமியும் சரஸ்வதியும் (செல்வமும் கல்வியும்) விளங்கும் கூடற் பெருமாளே! (மதுரை நகர்ப் பெருமாளே)! (பதிஞான வாழ்வைத் தருவாயே): 969. (நீதத்வம்) நீதித்தன்மை கொண்டதாய் (அல்லது (நீதம்) தியில் (துவம்) நிலை பெற்றதாய்) நியமமான-சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மீது கருணை செய்வதாய் விளங்கும் -(போதை) மூதறிவை-பெரிய ஞானத்தைத் தந்தருளுக. ஒலியும் ஒசையுமாய் விளங்குபவனே ஞானசமுத்திரமே! குற்றமிலாத அமுதம் அனையவனே! கூடற் பெருமாளே! (மதுரை நகர்ப் பெருமாளே) (போதைத் தருவாயே) 970. மனத்தில் நினைக்கின்ற முற்றின சூதான எண்ணங். களையே கொண்டவர்கள், ஆரவாரம் (அமர்க்களங்களைச்) செய்யும் பேயன்ன விகாரத்தினர்கள், (மதபலம்) ஆணவ பலத்தை - அகங்காரத்தை நாள்தோறும் (பாரி) பாரிக்கின்ற * விரித்துக் காட்டுகின்ற மாதர்கள் அழகாக (கை)யில் வளையல், (காதிற்) குழைகள், (மார்பில்) முத்துமாலை இவைகளைப் பூணும் வீணிகள் (வீண்பொழுது போக்குபவர்கள்), (விழலிகள்) பயனற்றவர்கள், மெச்சுப் படுதலில் ஆசைபூண்டு ஆடுபவர்கள் பாடுபவர்கள், வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள்போல ஒடுபவர்கள், தெருவிலே 'வாணிகடல் எனப் பெயர். "குடகில் வருங் காவிரி புகு வாணிக்கொழு நாடு" - அவிநாசிப் புராணம் கல்வெட்டுக்களில் திருவானி கூடல்' எனும் பெயர் வருகின்றது. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 13 - பரல் 5-பக்கம் 239; (பவ-மார்கழி) (தொடர்ச்சி 808 ஆம் பக்கம் பார்க்க)