பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுகரைநாடு) திருப்புகழ் உரை 865 பெருகவும், இரவும் பகலும் உன்னை நினைக்கும் நினைவு தவிர வேறு சிந்தனைகள் அற்று ழிய, (உன்) விருப்புக்குரிய குராமலரை அணியும் குமர ಶ್ಗ முருகனே! சடாகூ! மூர்த்தியே (ஆறெழுத்தண்ணலே)! சரவண (பவனே) கார்த்திகை மாதர்களின் கொங்கை (முலைப்பாலை)ப் பருகின அரசே! (என்றெல்லாம்) பாடி மொழிகள் குழறும்படி (உன்னைத்) துதிசெய் து வணங்கி, அழுது அழுது ஓயாமல் அழுது - நான் உனக்கு ಶ್ಟ!! * (எதுவும் அல்லாததான பொருளை) உலகப் பாருள் யாவற்றையும் கடந்த (ஞானப்) பொருளை - இது என்று சுட்டிக்காட்ட இயலாத அந்தப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா! (தந்தருளுக என்று வேண்டியதாகும்); (உலகோர்க்குத் தேவார மூலமாப், (அல்லது அடியேனுக்கு உபதேச மூலமாய்)ப்) பரகதியை - மோகூடி வீட்டைக் காட்டின (விரக) சாமர்த்தியசாலியே! (சிலோச்சய) மலையரசே! மகா பராக்ரமசாலியே! (சம்பராரி) மன்மதன் அழிய, (நெற்றிக்)கண் கொண்டு அவனை எதிர்த்தழித்த (பசுபதி) சிவபிரான் போற்றித் துதித்த (வாழ்வே) பகவதியாம் பார்வதி ஈன்றருளிய (வாழ்வே) செல்வமே! (864 ஆம் பக்கத் தொடர்ச்சி) முழுதுமலாப் பொருள்: "வாணன்று காலன்று தியன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசாரியன்று சரிரியன்றே"-கந்தரலங்-9, "உருவன் றருவன் துளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின்றதுவே" - கந், அநுபூதி 13, "மண்ணில்லை விண்ணல்லை வலயமல்லை, மலையல்லை கடலல்லை வாயுவல்லை, எண்ணல்லை, எழுத்தல்லை எரியும் அல்லை யிரவல்லை. பகலல்லை யாவும் அல்லை" - அப்பர் 6.45-9, * பரகதி காட்டினது. இதை அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பாகவும் கொள்ளலாம். f சம்பராரி - மன்மதன் - பாடல் 888-பக்கம் 594 கி.ழ்க்குறிப்பு. மன்மதனைச் சிவபிரான் எரித்தது - பாடல் 399 பக்கம் 5.10. சிவபிரான் கந்தவேளைப் போற்றினது-உபதேசம் பெற்றபோது. பாடல் 982-பக்கம் 81 கீ ழ்க்குறிப்பு.