பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 173 அவைகளால் வெருட்டப்படும் கயல்மீன்களும் ஒடித்திரியும் வயல்களும், நறுமணம் வீசும் தடாகங்களும், தாமரை மலர்கள் விளங்கும் அகழிகளும், மதில்களும் இவையெலாம் உடைய ஒப்பற்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் இளையோனே! அகில், மருதம், மலர்விடும் மகிழமரம், அமுதம்போல இனிக்கும் வாழை, (அருணம்) செம்மறியாடும் - (அல்லது மானும்) (வருடையும்) மலையாடும், கணக்கற்ற மதங்கொண்ட யானைகளும், சிங்கங்களும் (அல்லது குரங்குகளும்) உடனே இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இழிந்துவரும் அருமையான (வள்ளி) மலையில் ஒரு வேடப் பெண்ணை, சிவ முநிவர் தவத்தே வந்த பரிசுத்த நங்கையைக் காம மயக்குடன் (வசம் அழிந்து) அவளது மலரடியைத் தொழுது உருகிய பெருமாளே! (சிவசுக சலதியில் முழுகுவதொருநாளே) 513. மகர மீன்களை வீசி எறியும் கடல்போன்ற கண்ணிலும், பேச்சிலும், வண்டுகள் ஒலிசெயும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், நிலவு போன்ற முகத்திலும், இலவமலரைக் காட்டிலும் அதிக செந்நிற ஒளி விளங்கும். இனிமைதரும் வாயிதழினும், இடையினும், நடையினும், மாதர்களின் அரும்பிய கொங்கையிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும் சிலம்பணிந்ததுமான மலர்போன்ற அடிகளிலும் (நான்) வாடினாலும், அந்த மாதர்களுடைய பேர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர் இட்ட பணிவிடை களைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், அவர் பொருட்டு மனம் உருகி நீதிமுறை தவறி நடந்தாலும், அவருடன் விகடமொழிகள் (பரிகாசப் பேச்சுகள்) பேசிக்கொண்டி ருந்தாலும், படுக்கையில் அவர் தரும் காமப்பற்றாகின்ற

  • -